அனைவரும் மிக ஆவலாக எதிர்பார்க்கும் ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் 1 வாரமே இருக்கும் நிலையில் நேற்று ShowCase எனும் Trailer வெளியானது. இதை நெட்டிசன்கள் கொண்டாடி வரும் வேளையில் கடந்த வாரம் படத்தின் கதைக்களம் இணையத்தில் கசிந்தது. இவை அனைத்தையும் ஒப்பிட்டு இப்படத்தின் கதை இதுதானோ என கணித்துள்ளோம்…. வாங்க பார்க்கலாம்.…
ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் வலம் வரும் நம்ம Super Star ஒரு Ex-Jailer அதாவது ஓய்வுபெற்ற ஜெயில் வார்டன். அவர் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். அவர் மகன் காவல்துறையில் பணிபுரிகிறார். இப்படி எளிமையாக ஓடிக்கொண்டிருக்கும் இவர் வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்படுகிறது.
ஒரு நாள் வேளைக்கு புறப்பட்டு சென்ற தன் மகன் வீடு திரும்பவில்லை, அவர் போதைப்பொருள் மாஃபியாவால் கொல்லப்பட்டுள்ளார். ஒரு காவலரான தனது மகனின் மரணத்திற்குப் பழிவாங்கத் தனது திறமையைப் பயன்படுத்துகிறார் ஜெயிலர் – அதாங்க நம்ம சூப்பர் ஸ்டார். தன் மகனை யார் கொன்னதுனு தேட ஆரம்பிக்கிறாரு. அப்படி அந்த Gang’அ பிடிக்க, அது 1 இல்ல 2,3’னு போயிட்டே இருக்கு. அதாவது இந்த Gang’க்கு பின்னாடி இன்னொரு பெரிய gang, அதுக்கு பின்னாடி இன்னொரு gang’னு.
இப்படி தலைவர் வெறியோடு தேடுற விஷயம் நம்ம வில்லனுக்கு Information’அ போய் சேருது. இந்த Local Rowdy Gang ஓட தலைன் – தலைவர போட்டுத்தள்ள வீட்டுக்கு ஆல அனுப்புறான். இங்கதான் ஆட்டமே ஆரம்பிக்குது “Hukum Tiger’ka Hukum”, தலைவரு அலப்பறை start ஆக, அத்தனை ரௌடியையும் அடிச்சு துவம்சம் பன்றாரு. இங்க தான் Interval.
இந்த Fight’கு பிறகு rowdy gang துவம்சம் பண்ணின விஷயம் வில்லனுக்கு சொல்ராங்க, அவன் பேரு முத்துவேல் பாண்டியன், போலீஸ்காரனோட அப்பா’னு. அப்போ வில்லன் சொல்றாரு – அவன நீ பார்த்தது போலீஸ்காரனோட அப்பனா…. ஆனா நீ பாக்காத ஒருத்தன நா பார்த்திருக்கேன்…. இங்க Flashback Open ஆகுது…
Flashback’ல தலைவரோட பேரு “Tiger முத்துவேல் பாண்டியன்” – ஒரு Strict’ஆன ஜெயிலர். அந்த நேரத்துல நம்ம வில்லன் அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருப்பாரு. அந்த ஜெயிலுக்கு தான் தலைவர் ஜெயிலரா இருக்காரு. ஒரு கும்பல் தங்கள் தலைவனான வில்லனை சிறையில் இருந்து மீட்க முயற்சி செய்றாங்க, அத தெரிஞ்சிகிட்ட தலைவர் குறுக்க நின்னு அவங்கள தடுக்குறாரு..,
அப்புறம் என்ன இதுல வில்லனுக்கு ஹீரோக்கும் முட்டிக்கும் – ஜெயிலுக்கு உள்ளையும், வெளியேயும் ஒரே சம்பவம் தான். அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் அவங்க அவங்க வேலைய பார்த்துட்டு போய் இருக்கலாம், இப்போ திருப்பி சந்திக்குறாங்க. Climax’ல தலைவர் ஜெயில்ல சந்திச்ச ரவுடிங்க உதவியோடு வில்லன புடிச்சு கொல்றாரு.
என்னதான் இது பல படத்தோட கலவையா இருந்தாலும், உண்மையான கதை என்னனு படம் வெளியான பிறகு தான் தெரியும். So, அதுவரை இதே எதிர்பார்ப்போட காத்திருப்போம்.
-துர்கா பிரவீன் குமார், நியூஸ் 7 தமிழ்







