சந்தோஷத்திற்கு குடித்தேன்; விடுபட முடியாமல் தவித்தேன்

சந்தோஷத்திற்காக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பின்பு அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்ததாக குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட சிவகுமார் என்பவர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.  குடிப்பழக்கத்திற்கு இன்றைய இளைஞர்கள் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். இதனால் இன்றைய…

சந்தோஷத்திற்காக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பின்பு அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்ததாக குடிப்பழக்கத்திலிருந்து மீண்ட சிவகுமார் என்பவர் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். 

குடிப்பழக்கத்திற்கு இன்றைய இளைஞர்கள் அதிகமாக அடிமையாகி வருகின்றனர். இதனால் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் வேண்டாம் போதை என்ற தலைப்பில் விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளது. இதில் டிஜிட்டல் பார்ட்னராக daily huntம் இணைந்து இந்த விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளது.

நாமக்கல் எஸ்.பி.புதூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் முறுக்கு வியாபாரம் செய்து
வருகிறார். சந்தோசத்திற்காக மது குடித்த சிவக்குமார் கடந்த 25 ஆண்டுகளாக குடிபழக்கத்தில்  இருந்து விடுப்பட முடியாமல் தவித்த நிலையில் தற்போது நாமக்கல்லில் உள்ள ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பில் சேர்ந்து குடிபழக்கத்திலிருந்து விடுப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.

குடிபழக்கத்தினால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து சிவக்குமார்
கூறுகையில், 25 ஆண்டுகளாக குடிபழக்கத்திற்கு ஆளாகிய நான் குடும்பத்தில் மகிழ்ச்சியை இழந்தேன். குடிபழக்கத்தை விட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால்
சம்பாதித்த பணத்தை இழந்ததால் குடும்பம் பரிதாப நிலைக்கு சென்றது.

மேலும் தினமும் குடித்தேன். சாப்பிட முடியவில்லை, குழந்தைகள் கேட்க கூடிய சின்ன
பொருட்களை கூட வாங்கி கொடுக்க முடியவில்லை. உறவினர்களின் வீட்டு
விசேஷங்களுக்கு கூட மனைவியுடன் சேர்ந்து செல்ல முடியாத நிலைக்கு சென்றேன். தினம் தினம் மது குடித்ததால் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றது.

குடிபழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக நாமக்கல்லில் உள்ள தனியார் அமைப்பில்
இணைந்தேன். தற்போது குடி பழக்கத்தில் இருந்து விடுப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக
நலமுடன் வாழ்ந்து வருகிறேன் என குடிப்பழக்கத்தில் இருந்து விடுப்பட்ட
சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.