தமிழகம்

“எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி” – பிரேமலதா விஜயகாந்த

தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் துவக்கிவிட்டனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணிதான் என்றும், தனித்து போட்டியிடுவது என்பது புதிதானது இல்லை என்றும் தெரிவித்தார். அத்துடன் திமுக, அதிமுகவுக்கு மாற்றவாகவே தேமுதிக தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுக தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

2021 ஏப்ரல் வரை பொறியியல் கல்லூரிகளில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் – அண்ணா பல்கலை.

Nandhakumar

சிங்கப்பூரில் எனக்கு ஹோட்டல் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்: கடம்பூர் ராஜு

Saravana Kumar

அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்!

Karthick

Leave a Reply