“வேலை இல்லையென்றால் திருமணம் செய்து கொள்ள முடியாது” – வைரலாகும் விண்ணப்பதாரரின் பதில்!

அர்வா ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜ்,  விண்ணப்பதாரரின் பதிலை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.   அர்வா ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி…

அர்வா ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜ்,  விண்ணப்பதாரரின் பதிலை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  அந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அர்வா ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜா,  தனது நிறுவனத்தின் இன்ஜினியர் வேலைக்கான விண்ணப்பங்களை வெளியிட்டிருந்தார்.  அந்த விண்ணப்பத்தில் ஒரு நபர் கூறிய பதில் இணையத்தில் பரவி வருகிறது.   அந்த விண்ணப்பத்தில் “நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவர் என்று ஏன் நினைக்கீரிர்கள்?” என்று கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த அந்த நபர் ” இந்த வேலைக்கு தேவையான தனித்துவமான திறமைகள் என்னிடம் இருப்பதாக நான் நம்புகிறேன்.  மேலும் எனக்கு இந்த வேலை கிடைக்கவில்லையென்றால்,  என் குழந்தை பருவ காதலியை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது.  ஏனென்றால் உனக்கு வேலை இருந்தால் மட்டுமே,  அவளை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று அவளுடைய தந்தை கூறுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.

இவரின் பதிலை அர்வா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.  இதற்கு பலரும் தங்கள் கருத்தக்களை தெரிவித்துள்ளனர்.  அதில் ஒருவர் “இவர் நேர்மையான பதிலளித்திருக்கிறார்.  அவருக்கு வேலை கொடுங்கள்” என பதிலளித்துள்ளார்.  இன்னும் சிலர் “அவருக்கு வேலை வழங்கினீர்களா?” என கேள்வி எழுப்பி உள்ளனர்.  ஆனால் அவருக்கு வேலை கிடைத்ததா,  இல்லையா என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை.  அர்வா ஹெல்த் என்பது நிதி பஞ்ச்மல் மற்றும் டிபாலி பஜாஜ் ஆகியோரின் ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.