முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

என் வாழ்வில் இந்த 34 நாட்களை மறக்க முடியாது..! நெகிழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

‘லால் சலாம்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “படப்பிடிப்பு நடந்த 34 நாட்களும் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் என குறிபிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது கணவரான தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2015- ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு ‘ஓ சாத்தி சால்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக போவதாகவும் அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூன்றாவது திரைப்படமான லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியானது. கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் “லால் சலாம்” திரைப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோ ரோலில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான அறிவிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி, அதற்கான படப் பூஜை நடைபெற்ற நிலையில், லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் 7-ஆம் தேதி தொடங்கி, தற்போது முடிவடைந்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லால் சலாம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுளளார். அந்த பதிவில், “34 நாட்கள் நடைபெற்ற இந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என குறிப்பிட்டு புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த 34 நாட்களும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த இந்த வீடியோவை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், “லால் சலாம்” படத்தினை தயாரித்து வரும், லைகா தயாரிப்பு நிறுவனமும் 34 நாட்கள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தங்கள் நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இவ்விருவரும் வெளியிட்டுள்ள இந்த பதிவு ரஜினி மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram