4 வயதிலேயே சித்தப்பா ஆகிவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.
சித்தப்பா உறவினை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. . இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் பர்ஷ்ட் ஷோவை பார்த்த கமல் தன் வாழ்த்துகளை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
அதில், “நல்ல படங்களைப் பார்க்க, எடுக்க ஆசைப்படும் தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர் தம்பி சித்தார்த். சித்தா திரைப்படம் சித்தப்பா உறவினை மையமாக் கொண்டு உருவாகியுள்ளது. என் அண்ணன் சாருஹாசன் மகள் நந்தினி மூலமாக நான் 4 வயதிலேயே சித்தப்பா ஆகிவிட்டேன்.
நானும் அவரும் சேர்ந்தே பள்ளிக்கு செல்வோம். சித்தப்பாவாக என் அனுபவம் இது. சித்தா – சித்தப்பாவின் அனுபவத்தைப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் படம் சிறந்த வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.







