மகளின் பெயரை உடலில் 667 இடங்களில் பச்சை குத்திய பாசக்கார தந்தை!

இங்கிலாந்தை சேர்ந்த தனது மார்க் ஓவன் எவன்ஸ், தனது மகள் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த லூசி என்ற பெயரை முதுகு மற்றும் கால்களில் பச்சை குத்தி உள்ளார். உலகின் மிகப் பழமையான கலைகளில்…

இங்கிலாந்தை சேர்ந்த தனது மார்க் ஓவன் எவன்ஸ், தனது மகள் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த லூசி என்ற பெயரை முதுகு மற்றும் கால்களில் பச்சை குத்தி உள்ளார்.

உலகின் மிகப் பழமையான கலைகளில் ஒன்றாக ‘டாட்டூ’ (பச்சை குத்துதல்) கருதப்படுகிறது. ‘டாட்டூ’ கலை ஏறக்குறைய 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என உறுதியாக கூறப்படுகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓட்சி பழங்குடி மக்கள் ‘டாட்டூ’ குத்திக்கொண்டதை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த பச்சை குத்தும் பழக்கம் தற்போது ஒரு ட்ரெண்டாகவே மாறியுள்ளது. கழுத்து, கால், கை உள்ளிட்ட அவரவருக்கு பிடிக்கும் இடத்தில் பச்சை குத்திக்கொள்கின்றனர். அவரவருக்கு பிடிக்கும் வடிவங்கள், தாய் தந்தை பெயர்கள், தலைவர்களின் உருவங்கள் அல்லது பெயர்கள் என வரைந்து கொள்கின்றனர். தற்போது அவ்வாறு வரைந்த பச்சைகளை நீக்குவதற்கும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த மார்க் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 49 வயதான மார்க் ஓவன் எவன்ஸ் ஏற்கனவே தனது மகளின் பெயரான லூசி என்பதை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017ம் ஆண்டு சாதனை படைத்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார்.

இதைத் தொடர்ந்து விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க எவன்ஸ் திட்டமிட்டார். அதன்படி கின்னஸ் சாதனை அமைப்புக்கு தகவல் தெரிவித்து, 2 டாட்டூ கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மார்க் ஓவன் எவன்ஸ் கூறுகையில், இந்த சாதனையை எனது மகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.