“காவல்துறை எப்பொழுது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராக உள்ளேன்” – இயக்குநர் அமீர்!

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில்,  காவல்துறை எப்பொழுது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராக இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். இயக்குநர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் என்னை எப்பொழுது விசாரணைக்காக அழைத்தாலும் தயராகவே…

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில்,  காவல்துறை எப்பொழுது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராக இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் என்னை எப்பொழுது விசாரணைக்காக அழைத்தாலும் தயராகவே இருக்கிறேன் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வீடியோ வெளியிட்டு கூறியிருப்பதாவது;

“இறைவன் மிகப் பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டேன்.  இருந்தும் என்னையும் குற்றச் செயல்களோட தொடர்புபடுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை காண முடிகிறது.  மது, விபச்சாரம்,  வட்டி எதிரான சித்தாந்தத்தை கொண்ட மார்க்கத்தை பின்பற்றக் கூடியவன் நான்.  அப்படி இருக்கையில் இது போன்ற ஒரு குற்றச்செயலில் என்னை நீங்கள் தொடர்புபடுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர,  என்னுடைய குடும்பத்தினருக்கு மன உளைச்சல்களை ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்த பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது.

நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளிலும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள்.  சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு அந்த வீடியோவில் இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.