முக்கியச் செய்திகள் சினிமா

நான் தவறு செய்யவில்லை, உண்மை ஒரு நாள் வெளி வரும் – நடிகர் அரணவ்

பழி வாங்க வேண்டும் என நினைத்தாய் திவ்யா பழி வாங்கிவிட்டாய் சந்தோஷமா எனச் சிறைக்குச் செல்லும் நடிகர் அரணவ் முன் பேட்டி.

சின்னதிரை நடிகர் அரணவ் அவரது காதல் மனைவி கர்ப்பினியான சின்னதிரை நடிகை திவ்யாவை அடித்துத் துன்புறுத்தியாக அவர் அளித்த புகாரில் போருர் அனைத்து மகளிர் போலீசார் அரணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று வழக்கு பதிவு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த புகார் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை போலீசார் தெரிவித்தும் அரணவ் விசாரணைக்கு ஆஜராகாததால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அமைப்பி இருந்தனர். போலீசார் அனுப்பிய சம்மனை அரணவ் பெற்று கொண்டதாகவும் குறிப்பாக பதிவு தபால் மற்றும் செல்போனிலும் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை அவர் பெற்று கொண்ட நிலையில் இன்று காலை விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் மாங்காட்டில் உள்ள போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டரிடம் அரணவிற்கு கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன் காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராவதில் கால அவகாசம் வேண்டும்.

எனவும் வரும் 18ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என விளக்கக் கடிதம் கொடுத்தனர். அதனை போலீசார் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் வக்கீல்கள் அங்கிருந்து கிளம்பி பதிவு தபால் மூலம் அனுப்புவதற்கு சென்றனர். அரணவ் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்கும் நாட்களுக்கு இடையில் அவர் முன் ஜாமீன் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் அரணவ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான சான்றுகள் ஏதும் தராததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போனினை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது இதையடுத்து அவர் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து போரூர் தனிப்படை போலீசார் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பிலிருந்த அரணவை அதிரடியாகக் கைது செய்தனர். போலீசார் வருவதைச் சற்றும் எதிர்பாராமல் இருந்த அரணவ் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதையடுத்து அரணவை மாங்காடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணைக்கு ஆஜராகாமல் நாடகமாடி விட்டுப் படப்பிடிப்பிலிருந்த சின்னதிரை நடிகர் அரணவை படப்பிடிப்பு தளத்தில் வைத்தே போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட அரணவை பூந்தமல்லியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டு பின்னர் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பரம்வீர் முன்னர் ஆஜர் படுத்தினர். நடிகர் அரணவிற்கு வரும் 28ம் தேதி வரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறைக்கு அழைத்துச் செல்லும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரணவ் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் உண்மை ஒருநாள் நிரூபிக்கப்படும் எனக் கூறினார்.மேலும் என்னைப் பழி வாங்க வேண்டும் என நினைத்தாய் திவ்யா அதை செய்து விடாய் இப்பொழுது சந்தோஷமா என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில்,190 நாடுகளில் வெளியாகிறது!

Gayathri Venkatesan

கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போன பொன்னியின் செல்வன் நடிகர்கள்!

EZHILARASAN D

நெல்லை கண்ணன் மறைவு; கி.வீரமணி இரங்கல்

G SaravanaKumar