35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘தக் லைஃப்’. நடிகர்கள் சிலம்பரசன், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின. ‘ஜிங்குச்சா’ ஏற்கனவே ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், ‘விண்வெளி நாயகா’, ‘அஞ்சுவண்ண பூவே’, ‘முத்த மழை’ பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக அமைந்துள்ளன. படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விண்வெளி நாயகா பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்ருதிஹாசன் பாடலை பாடியுள்ளார்.







