முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது – தமிழிசை

புதுச்சேரியில் கம்பன் விழாவில் கலந்து கொண்ட அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

 

புதுச்சேரி, கம்பன் கலையரங்கத்தில் 55-ம் ஆண்டு கம்பன் விழா நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். விழாவில் அம்மாநில சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

 

விழாவில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இன்றைய காலத்தில் திரைப்படங்களை பார்ப்பதற்கு கூட 3 நாட்கள் அரங்கு நிறைவதில்லை என்றும், ஆனால் புதுச்சேரியில் கம்பன் விழாவிற்கு 3 நாட்களும் அரங்கு நிறைந்து இருக்கும் என்றும் தெரிவித்தார். கம்பன் வட மொழியையும் படித்து கம்ப ராமாயணத்தை எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

தாய்மொழி தான் உயிர் அதை முழுமையாக படிக்காமல் பிற மொழியை திட்டுவது தவறு என்றும் பிற மொழி கற்பது தவறு இல்லை என்றும், தமிழ் விளையாடும் மாநிலமாக புதுச்சேரி விளங்குவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். ஜிப்மரில் தமிழ் இல்லை என கூறி அரசியலாக்கி சிலர் தினமும் போராட்டம் நடத்துவதால், நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழுக்கு தலைகுனிவு என்றால் புதுச்சேரி அரசு ஏற்று கொள்ளாது என தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழை உயிராய் ஏற்கும் நாம் பிற மொழியை நிந்திக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

குற்றால அருவிகளில் இரண்டு நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Jayapriya

பாதுகாப்புடன் தொடங்கிய மேற்கு வங்க 5-ம் கட்ட வாக்குப்பதிவு!

எல்.ரேணுகாதேவி

ஐபிஎல்: விராத் டீமில் இணைந்த இலங்கை ஆல் ரவுண்டர்

Gayathri Venkatesan