அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்துவிட்டேன் என்று விஜய் ஆண்டனி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தயாரித்து, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான, பாடல் காட்சி லங்காவி தீவில் அண்மையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, கடலுக்குள் செலுத்தும் ‘ஜெட் ஸ்கை’ எனப்படும் பைக்கில் விஜய் ஆண்டனியும் காவ்யா தாப்பரும் செல்வதுபோல படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக மற்றொரு, ‘ஜெட் ஸ்கை’ வாகனத்தின் மீது, விஜய் ஆண்டனியின் வாகனம் மோதியது. இந்த விபத்தில் விஜய் ஆண்டனியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டன. காவ்யா தாப்பர் காயமின்றி தப்பினார்.
உடனடியாக படக்குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆரம்பகட்ட சிகிச்சை பெற்ற அவர் பின்னர் சென்னை திரும்பினார்.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அண்மையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தன் உடல்நலம் குறித்து விஜய் ஆண்டனி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அன்பு இதயங்களே
நான் 90% குணம் அடைந்து விட்டேன்.
உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்😊
வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்🙏
அன்புக்கு நன்றி— vijayantony (@vijayantony) February 2, 2023
அந்தப் பதிவில், அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்துவிட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்.
அன்புக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா