லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் டிசி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் குறிப்படத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். ரஜினிகாந்த, விஜய், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இவர் ‘மாநகரம்’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக இவர் இயக்கிய கூலி  திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது.  அடுத்ததாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘டிசி’. அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக வாமிகா கபி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் டிசி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.