யஷ் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தைப் பார்த்து ஒரு பாக்கெட் சிகரெட்டை பிடித்த 15 வயது சிறுவன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதாராபாதைச் சேர்ந்த அந்தச் சிறுவன், வறட்டு இருமல், தொண்டை வலியால் அவதிப்பட்டார். அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து, பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த சிறுவனை அவரது பெற்றோர் அனுமதித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தச் சிறுவனுக்கு மார்பு பகுதியில் எக்ஸ் ரே எடுத்து மருத்துவர் பரிசோதித்தார். புகைப்பிடித்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நுரையீரல் நிபுணர் கூறினார். கேஎஜிஎஃப் படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரம் மிகவும் ஸ்டைலாக இருந்தது. அந்தக் கதாபாத்திரம் புகைப்பிடித்ததைப் பார்த்துதான் நானும் புகைத்தேன். புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அந்தச் சிறுவனுக்கு விளக்கிக் கூறினேன். நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரித்தேன் என்று மருத்துவர் தெரிவித்தார்.