விழுப்புரத்தில் கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான சந்தோஷ், மனைவி சுரேகா மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுரேகா மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்ட சந்தோஷ் கர்ப்பத்தை கலைத்துவிடுமாறு கூறி தகராறு செய்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து மனைவியை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அந்தக் கத்தியைப் பறித்த சுரேகா கணவன் சந்தோஷை சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். வழக்குப் பதிவு செய்த போலீசார் சுரேகாவை கைது செய்தனர்.








