2 மாத கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது!

அமெரிக்கா சிகாகோவில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது செய்யபட்டார். கேரளா மாநிலம், கோட்டயம் உழவூரைச் சேர்ந்த மீரா(32),  அவரது கணவர் அமல் ரெஜி. இவர்களுக்கு மூன்று…

அமெரிக்கா சிகாகோவில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் கைது செய்யபட்டார்.

கேரளா மாநிலம், கோட்டயம் உழவூரைச் சேர்ந்த மீரா(32),  அவரது கணவர் அமல் ரெஜி.
இவர்களுக்கு மூன்று வயத்தில் ஒரு குழந்தை உள்ளது. மீரா தற்பொது 2 மாத
கர்ப்பிணியாக உள்ளார். இவர்கள் இருவரும் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் வசித்து
வருகின்றனர். 

இந்நிலையில் நேற்றிரவு அமல் தனது கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த மீராவை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது கணவர் அமல் ரெஜியை சிகாகோ போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்களை:தகைசால் தமிழருக்கு பிரியாவிடை – 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்..!

குடும்பப் பிரச்னை காரணமாக தனது மனைவியை சுட்டதாக அமல் தனது முகநூல்
பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  மீராவின் தாடை மற்றும் வயிற்றில் துப்பாக்கியால்
சுடப்பட்டுள்ளார். 

மேலும், மீராவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வயிற்றில்  ரத்தம் வெளியேறுவதற்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும்,  நுரையீரலில்
வீக்கம் ஏற்பட்டுள்ளதால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, அமல் பதிவிட்ட சமூக வலைதள ஸ்டேட்டஸ் வெளியானதும்,  துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னணியில் குடும்பப் பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது.  அமல் ரெஜியின் மொபைல் போனையும் சிகாகோ போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.