இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட 12% அதிகமாகும். இதன் காரணமாக மொத்த பாதிப்பு 3,41,08,996ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 19,446 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,34,78,247 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் 197 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,52,651 ஆக அதிகரித்துள்ளது.
https://twitter.com/MoHFW_INDIA/status/1450671087251968003
கொரோனா தொற்றுடன் 1 லட்சத்து 78 ஆயிரத்து 098 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 99 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரத்து 283 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட கடந்த 24 மணி நேரத்திய கொரோனா பாதிப்பில் 7,643 பேர் கேரளாவை சேர்ந்தவர்களாவார்கள் அதேபோல உயிரிழப்பில் 77 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








