முக்கியச் செய்திகள் இந்தியா

மமிதா மெஹர் மரணம்; ட்ரெண்ட் ஆகும் #JusticeForMamita ஹேஸ்டேக்

பள்ளி ஆசிரியை மமிதா மெஹர் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் #JusticeForMamita என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

ஒடிசாவின் பலாங்கீர் மாவட்டத்தின் துரேகேலா தொகுதியை சேர்ந்தவர் மமிதா மெஹர். இவர், கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மேலும், அவர் பெண்கள் விடுதியின் வார்டனாகவும் பணியாற்றினார். இந்நிலையில், மமிதா கடந்த அக்டோபர் 8 காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரது உடல் எரிந்த நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கும் பள்ளியின் மைதானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

அவரது அருகில் இருந்த செயினை வைத்து அது மமிதாவின் உடல் என அவரது உறவினர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அவரது சகோதரர் பாண்டி மெஹர் தனது சகோதரியின் மரணத்தில் பள்ளி நிர்வாக தலைவர் கோபிந்த் சாஹுவுக்கு தொடர்பு இருப்பதாக புகாரளித்தார். இதனடிப்படையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவர் கடந்த 17ம் போலீஸ் காவலில் இருந்து தப்பினார். இதையடுத்து, அவர் குறித்த தகவல் தருபவர்களுக்கு 1,00,000 பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.

இந்நிலையில், பங்கமுண்டா மாவட்டத்தில் உள்ள சாஹுவின் சகோதரி வீட்டில் இருந்து போலீசார் அவரை கைது செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவரின் கொலை வழக்கில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ட்விட்டரில் #JusticeforMamita என்ற ஹேஸ்டேக்கில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், கந்தபஞ்சியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சந்தோஷ் சிங் சலுஜாவுடன் இந்த வழக்கில் தொடர்புடைய கோபிந்த் சாஹுவும் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டன. இதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Advertisement:
SHARE

Related posts

பிளஸ் டூ மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் போக்சோவில் கைது

Saravana Kumar

வடகொரியாவின் உணவு பஞ்சத்திற்கான காரணம் இதுதான்!

Gayathri Venkatesan

மக்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் கருணாநிதி.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்

Gayathri Venkatesan