மழையால் சேதம் அடைந்த பயிர்கள் -நிவாரணம் வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ வட்டாட்சியரிடம் மனு !

எட்டையாபுரம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்குநிவாரணம் வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ வட்டாட்சியரிடம் மனுவழங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒரு லட்சம் ஹெக்டேர்பரப்பளவில் விளைந்த பயிர்கள் மழை வெள்ளத்தினால் சேதம் அடைந்தது…

எட்டையாபுரம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு
நிவாரணம் வழங்க கோரி முன்னாள் எம்எல்ஏ வட்டாட்சியரிடம் மனு
வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒரு லட்சம் ஹெக்டேர்
பரப்பளவில் விளைந்த பயிர்கள் மழை வெள்ளத்தினால் சேதம் அடைந்தது . அதனை தொடர்ந்து விவசாய நிலங்களில் உளுந்து,மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் ,கொத்தமல்லி ,சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் கடந்த புரட்டாசி மாதம் பயிரிடப்பட்டன.கடந்த வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக உளுந்து ,வெங்காயம் ,பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது .

அந்த வகையில் மழையால் ஒரு பக்கம் பாதிப்பு எற்ப்பட்டுயிருந்தாலும் மறுபக்கம் காட்டு பன்றிகளால் பயிர்கள் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி ,முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் எட்டையபுரம் வட்டாட்சியரிடம் மனு வழங்கினர் . மனு வழங்கும் நிகழ்வின் போது எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜகுமார் மற்றும் கரிசல் பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.