முக்கியச் செய்திகள் இந்தியா

கணவன் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது குற்றம் என அழைக்க முடியுமா? நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவின் சர்ச்சை பேச்சு

“இரண்டு பேர் கணவன் – மனைவியாக வாழும்போது, கணவர் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உடலுறவின் செயலை பாலியல் வன்முறை என அழைக்க முடியுமா? என உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) பாலியல் வன்முறை தொடர்பான இரண்டு வழக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விசாரணையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வினய் பிரதாப் சிங் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில் வினய் பிரதாப் சிங் என்பவர் தன்னை மணாலியில் உள்ள கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடம் இருவரும் ஒன்றாக வாழ்ந்ததாகவும் ஒன்றாக வாழ்ந்த நாட்களில் தன்னுடைய கால் எலும்பை உடைத்ததாகவும் அந்தரங்க பகுதியில் கொடூரமான தாக்குதலை ஏற்படுத்தியதாகவும் பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டதாக” அந்த மனுவில் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருந்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அலகாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுதலைச் செய்யுமாறு புகார் சுமத்தப்பட்ட வினய் பிரதாப் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் உயர் நீதிமன்றம் புகார் மனுவை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனையடுத்து வினய் பிரதாப் சிங் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி எஸ்.ஏ. பாப்டே “திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதியை ஆணோ பெண்ணோ கொடுக்கக் கூடாது. பெண்கள் கண்டிப்பாக இதுபோன்ற வாக்குறுதியை அளிக்கக்கூடாது” என்றார்.

மேலும் பேசிய அவர் “இரண்டு பேர் கணவன் – மனைவியாக வாழும்போது, கணவர் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உடலுறவின் செயலை பாலியல் வன்முறை என அழைக்க முடியுமா? என உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே சர்ச்சையான கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் தாக்குதல் மற்றும் திருமண கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கலாம் ஏன் பாலியல் பலாத்காரம் என்ற பெயரில் வழக்குத் தொடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்பட்ட பெண் பணத்திற்காக இவ்வாறு பொய் புகார் அளித்திருப்பதாக வினய் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே “வினய் பிரதாப் சிங் மிதான குற்றங்களுக்கான சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்ட பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அவர் நாடியுள்ளதாகவும், குற்றம் சுமத்தப்பட்ட வினய் பிரதாப் சிங்கை கைது செய்வதிலிருந்து நான்கு வாரங்கள் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை ரத்து செய்ய மறுத்துவிட்டது.

மேலும் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் வந்த மைனர் பெண் பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டப்பட்டவரே திருமணம் செய்துகொள்ள இயலுமா? என கேட்ட கேள்வியும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் இந்த சர்ச்சை பேச்சுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆன்லைன் விளையாட்டுகள் சிறார்களுக்கு தெரிய வந்தது எப்படி? நீதிபதிகள் கேள்வி

G SaravanaKumar

டி-20 தொடர் ; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

EZHILARASAN D

உத்தரகாண்ட் வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் அமித் ஷா ஆய்வு

Halley Karthik