விரைவில் மாமனிதன்… இயக்குநர் சீனுராமசாமி

விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள ’மாமனிதன்’ படத்தின் முதல் பார்வை மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள ’மாமனிதன்’ படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன்…

விஜய்சேதுபதி, காயத்ரி நடித்துள்ள ’மாமனிதன்’ படத்தின் முதல் பார்வை மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள ’மாமனிதன்’ படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இந்நிலையில், இந்தப்படம் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் சீனு ராமசாமி, ’மாமனிதன்’ தலைப்பு, ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது.

அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா, இரண்டு நாட்களுக்கு முன் பெற்றார். தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.