Signature validate செய்வது எப்படி? என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கா? அப்படியென்றால் உங்களுக்கான பகுதிதான் இது.
இணையதளத்தின் அதிரடி வளர்ச்சியால், நொடிக்கு நொடி அவர் அவருக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ள முடிகிறது. அப்படி இணையத்தை பயன்படுத்தி, நமக்குத் தேவையான ஆதார் அட்டை, பேன் அட்டை, பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் எனப் பலவகையான சான்றுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடிகிறது. அப்படிப் பெறும் இ-சான்றிதழில் Signature Verified செய்யப்படாமல் இருப்பதைப் பார்த்து இருக்க முடியும். முறைப்படி இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்களை Signature Valid செய்துதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், பலர் அதனை அப்படியே தரவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சரி Signature Valid எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி நமக்குத் தேவையான சான்றிதழில் Signature Valid செய்துகொள்ளலாம். இல்லையென்றால், நாமே நமது கணினியைப் பயன்படுத்தி Signature Valid செய்து கொள்ள முடியும்.
1. நமக்குத் தேவையான மின் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
2. பதிவிறக்கம் செய்யப்பட்ட மின் சான்றிதழின் மீது மவுஸ் கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்ய வேண்டும். (அதற்கு முன்பு அந்த சான்றிதழ் Adobe Reader ஓப்பன் செய்யப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும்)
3. திரையில் இருக்கும் Signature Not Verified என்பதனை ரைட் கிளிக் செய்ய வேண்டும்.
4. அடுத்து Show Signer’s Certificate என்பதனை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து அங்கு உள்ள Trust என்பதனை தேர்வு செய்ய வேண்டும். அதில், Add to Trusted Certificates என்பதனை தேர்வு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து Certified documents என்பதின் கீழ் உள்ள மூன்று பிரிவுகளையும் தேர்வு செய்து ஓகே என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
5. இறுதியாக Signature Properties சென்று Validate Signature எனக் கொடுத்தால் நமக்குத் தேவையான சான்றிதழ் Signature validate ஆகக் கிடைக்கும்.