ஹேக்கர்களிடம் இருந்து லேப்டாப் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த வழிமுறைகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில், லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் அத்தியாவசிய பொருட்களாக மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா காலத்தில் லேப்டாப் பயன்பாடு அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வதால் அதுவரை லேப்டாப் இல்லாதவர்கள் கூட வாங்கியுள்ளனர். தொழில்நுட்பம் வளர்ச்சியில் நல்லவையும் இருக்கிறது அதேசமயம், தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி இருக்கத் தகவல் திருட்டு, ஆன்லைன் கிரைம், ஹேக்கிங் அதிகமாகியுள்ளது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
அண்மைச் செய்தி: ‘விமானத்தில் மயங்கி விழுந்த பயணி; உதவி செய்த ஆளுநர்’
எப்படி லேப்டாப்பை பாதுகாப்பாக பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
1. ஃபயர்வால் பயன்படுத்துவது.
2. வைரஸ் தடுப்பு மென்பொருளை நிறுவுவது.
3. ஸ்பைவேர் எதிர்ப்பு தொகுப்பை நிறுவுவது.
4. சிக்கலான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது.
5. உங்கள் OS, ஆப்ஸ்-ஐ புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது.
6. ஸ்பேமை புறக்கணிப்பது.
7. உங்கள் கணினியின் காப்புப் பிரதியை எடுத்து வைப்பது.
8. தொழில் ரீதியான தளங்களைத் தேவை இல்லாத போது மூடி வைப்பது.
9. நம்பகத்தன்மை அற்ற இணையதளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது.
10. பாதுகாப்பான நெட்வொர்க்கை மட்டும் பயன்படுத்துவது.
11. இரு காரணி அங்கீகாரத்தைப் பயன்படுத்துவது.
12. புளூடூத்தை ஆப் செய்து வைப்பது.
13. பாதுகாப்பற்ற பொது Wi-Fi சேவையைப் பயன்படுத்தாமல் இருப்பது.
14. பாதுகாப்பு பயன்பாட்டைப் பெறுவது.
15. சிறந்த கடவுக்குறியீட்டைப் பயன்படுத்துவது.
16. ஸ்விட்ச் ஆஃப் தானாக நிறைவு செய்யும்படி அமைப்பது.
17. உங்கள் தேடல் வரலாற்றை முறையாக அழிப்பது, ஆகியவற்றை மேற்கொள்ளும் போது, ஹேக்கர்களிடம் இருந்து லேப்டாப் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாக்கலாம்.








