அரும்பாக்கம் பெட் கோல்டு வங்கியில் பணிபுரியும் ஊழியரே தனது கூட்டாளிகளை அழைத்து வந்து வங்கியில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்வம் குறித்து தற்போது பார்க்கலாம்.
சென்னை அரும்பாக்கம், ரசாகார்டன் பகுதி சந்திப்பு எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிற ஒரு சாலை சந்திப்பாகும். இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள நகைக் கடன் வழங்கும் வங்கி நிறுவனமான பெட் கோல்டு வங்கி நிறுவனத்தில் இருந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு, அலைபேசி மூலம் நடுங்கிய குரலுடன் ஒரு புகார் வந்துள்ளது. அதில் பேசியவர் தங்களை மயக்கமடைய செய்து விட்டு உள்ளிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு சென்றதாகவும், தாங்கள் வங்கியினுள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக விரைந்து சென்ற அரும்பாக்கம் காவல்துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். எவ்வாறு இந்த சம்பவம் நிகழ்ந்தது, யார் அந்த கொள்ளையர், எவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டார் என்றெல்லாம் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். மேலும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு ஐபிஎஸ், இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்டோரும் வந்தனர்.
தடைய அறிவியல் நிபுணர்கள் சோதனைக்காக அழைத்து வரபட்டதை அடுத்து, கொள்ளை சம்பவம் நடத்த கோல்டு வங்கியினை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சம்பவம் நடந்த வங்கியானது போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தது இதே கிளையில் பணிபுரியும் முருகன் என்பதும், அவர் பாடியை சேர்ந்தவர் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று பிற்பகல் முருகன் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் வரும் போதே மயக்க மருந்து கலந்த குளிர்பானம் வாங்கி வந்துள்ளனர். முதலில் காவலாளியிடம் முருகன் குளிர்பானத்தை குடிக்க சொல்லி கூறியதாக சொல்லப்படுகிறது. குளிர்பானத்தை குடித்த அவர், கொள்ளை சம்பவம் நடைபெற்ற கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அறை மயக்க நிலைக்கு சென்ற பிறகே தாம் குடித்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில் காவலாளியை முருகன் மற்றும் அவரது கூட்டாளி கத்தினால் குத்தி விடுவேன் என கத்தி வைத்து மிரட்டியதாகவும், பின்பு மயக்கம் அடைந்த பின்பு கட்டி போட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து வங்கியுனுள் நுழைந்துள்ள முருகன், மேலாளர் சுரேஷ் மற்றும் விஜயலக்ஷ்மி என்னும் பெண் ஊழியர் ஆகிய இருவருக்கும், அதே போல மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இருவரும் மயக்க நிலைக்கு சென்ற பின்பு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும், கோல்டு வங்கியில் இருந்த லாக்கரில் இருந்து ரூபாய் 20 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை எடுத்துள்ளனர்.
கொள்ளையடிப்பது குறித்து ஏற்கனவே திட்டம் தீட்டி வைத்திருந்த முருகன், வங்கியின் உள்ளே இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் அனைத்தையும் டிஷ் கணெக்ட் செய்து விட்டதாகவும், கொள்ளையடித்த பின்னர் தடையத்தை அளிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. கொள்ளை அடித்த பின்னர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து, மயக்க நிலையில் இருந்த இரண்டு ஊழியர்களான சுரேஷ் மற்றும் விஜயலட்சுமியை இழுத்து சென்று, நகைகள் வைப்பதற்காக இருக்கும் லாக்கர் அறையில் அத்து வைத்து விட்டு சென்றனர்.
முருகன் இந்த வங்கியில் பணி புரிவதால், இந்த வங்கியில் அடமானம் வைக்கப்படும் நபர்களின் ஆபரணங்களை அவரே எடுத்து சென்று, அவரிடம் இருக்கும் சாவியை கொண்டு லாக்கர் அறையை திறந்து, பொருட்களை பத்திரப்படுத்துவது வழக்கம். அதனால் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருந்த முருகனுக்கு அட்சு பிசுறாமல் அடுத்தடுத்து வசதியாக கொள்ளை அடிக்க ஏதுவாக அனைத்தும் நடத்தி முடிக்கும் அனுபவம் வசதியாகி உள்ளது. அதன் பின் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து, கொள்ளையடித்த பொருட்களை எடுத்து சென்றனர்.
இதனிடையே, மயக்க நிலை தெளிந்ததும் வங்கியின் மேலாளர் சுரேஷ் காவல் துறையினரை தொடர்பு கொண்டு, சம்பவத்தை தெரிவித்துள்ளார். பின்னரே போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டுள்ளனர். பின்னர் நடத்திய விசாரணையில் தான் இந்த சம்வம் அரங்கேறியது தெரியவந்தது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டதன் அடிப்படையில், தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குற்றவாளிகளில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும், அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், மீதம் இருக்கும் அடையாளம் தெரியாத இருவரை தீவிரமாக தேடி வருவதாகவும் கூடுதல் காவல் ஆணையர் அன்பு ஐபிஎஸ் தெரிவித்தார். அதேசமயம் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பெட் கோல்டு வங்கியில் நகை அடமானம் வைத்து, சரிவர வட்டி கட்டி வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும், வங்கியை தொடர்ச்சியாக நேரில் வந்து முற்றுகையிட ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் 20 சவரன் தங்க நகைக்கு மேல் அடமானம் வைத்து நகைக்கடன் பெற்று இருப்பதாகவும், ஒவ்வொன்றும் தங்கள் அவசர தேவைக்காக வைக்கப்பட்டது எனவும் வருத்தம் தெரிவித்த வாரே முணுமுணுத்து சென்றனர்.
– நாகராஜன்









