சமீபத்தில் வெளியான கேஜிஎப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சஞ்சய் தத். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த சஞ்சய் தத்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. 100 படங்களுக்கு மேல் நடித்தவர். தற்போது லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் புற்றுநோயிலிருந்து மீண்டது குறித்த அனுபவங்களை புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுவாந்தி லிமாயி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து புற்றுநோய் மருத்துவர் சுவாந்தி லிமாயி கூறும்பொழுது, 2020-ம் ஆண்டு சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது போது அதுகுறித்த பயத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அவர் தனது மனதை தைரியமாக வைத்துக் கொண்டார். அவர் என்னிடம், எனக்கு புற்றுநோய் வராதது போல நான் தொடர்ந்து முன்செல்ல போகிறேன் என்று தெரிவித்தார். எனது வாழ்கையை திரும்ப பெற போகிறேன். அதற்காக நான் எவ்வளவு ஒழுங்கை வேண்டுமானாலும் கடைபிடிக்க தயாராக இருக்கிறேன் என்றார். சஞ்சய் தத் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் சிறிதளவு கூட இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் லிமாயி கூறுகையில், அவர் புற்றுநோயிலிருந்து மீள மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் சஞ்சய் தத்துக்கு மன உறுதி அதிகமாக இருந்தது. இரண்டாவது காரணம சஞ்சய் தத்தின் குடும்பம் மற்றும் நண்பர்கள் மிகவும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். மூன்றாவது காரணம் அவருடைய ஜீன் தகவல்களை வைத்து அவருக்கு மருத்துவம் செய்தது. இந்த மூன்று காரணங்கள்தான் அவர் புற்று நோயிலிருந்து மீள காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.







