இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான பி.டி.உஷாவின் தடகள பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
முன்னாள் இந்திய தடகள வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான பி.டி.உஷா கோழிக்கோடு அருகே பாலுச்சேரியில் உள்ள தனது தடகள பள்ளியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேரளாவில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.உஷா, கோழிக்கோடு பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள எனது தடகள பள்ளியில் பல பெண்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். சிலர் உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெட்டிக்ஸ் வளாகத்திற்குள் நுழைந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர். நிர்வாகம் அவர்களை எதிர்கொண்ட போது, அவர்கள் தவறாக நடந்து கொண்டனர். பனங்காடு பஞ்சாயத்தில் அனுமதி பெற்றதாக கூறி, போலீசில் புகார் செய்துள்ளோம்.போதைக்கு அடிமையானவர்கள் உள்ளிட்ட சமூக விரோதிகள் இரவில் வளாகத்திற்குள் புகுந்து கழிவுகளை வடிகால்களில் கொட்டுகின்றனர். நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையில் கேரள முதல்வர் தலையிட்டு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது வளர்ந்து வரும் நிறுவனம், பல விளையாட்டு வீரர்கள் அங்கு பயிற்சி பெற்று வருகின்றனர், இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. அங்கு படிக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பே எங்கள் முக்கியக் கவலை, இன்னும் அந்தப் பகுதியைச் சுற்றி வேலியோ அல்லது எல்லையோ அமைக்க முடியவில்லை. போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது அங்கு கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.