முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீபாவளி தினத்தன்று எத்தனை இடங்களில் தீ விபத்து – தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள விளக்கம்

தீபாவளியான நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

 

தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து இந்தாண்டு தீபாவளியை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இந்நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் இருந்து பெரிய தீவிபத்து சம்பவங்களை தடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து 23 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று தீபாவளி அன்று தமிழகம் முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 180 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய தீ விபத்து சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும், உயிர் பலி எதுவும் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தீபாவளி பண்டிகை தினத்தன்று, காலை, 6 மணி முதல், 7 மணி வரை, இரவு, 7 மணி முதல், 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று காவல்துறை உத்ததரவிட்டது. அந்த நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக, சென்னையில் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு ஆளுநருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கண்டனம்

Web Editor

குடிசை பகுதிகளை அகற்றம்: பா.ரஞ்சித் கண்டனம்

Niruban Chakkaaravarthi

கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி?