முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

மியான்மரில் வான்வெளி தாக்குதல் – சோகத்தில் முடிந்த இசை நிகழ்ச்சி

மியான்மரில் இசைநிகழ்ச்சியின் போது, ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆட்சியை கலைத்த அந்நாட்டு ராணுவம் நாட்டை கைப்பற்றியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் ஆங் சான் சூகியை வீட்டுக்காவலில் வைத்தது. மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், மியான்மரில் உள்ள வடக்கு மாகாணமான கச்சினியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற போது ராணுவத்தினர் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, ராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், இசைக்கலைஞர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்நாட்டு ராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது.

எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. பொது மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு ராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொத்து தகராறு: மாமனாரை கொலை செய்த மருமகன்!

Jayapriya

கடன் சுமையால் தத்தளிக்கிறதா அதானி குழுமம் ?

Web Editor

தமிழ்நாடு காவல்துறையின் அறிக்கைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில்

EZHILARASAN D