ஹரிஸ் கல்யாண் நடிப்பில், ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் வெளியாகி உள்ளது LGM. ஹரிஸ் கல்யாண் படம் என்பதை தாண்டி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தோனி அறிமுகமாகும் முதல் படம் என எதிர்பார்ப்புகள் எழுந்தது. குறுகிய காலகட்டத்தில் எடுத்து முடித்த படம். தோனிக்கு இந்த எல்ஜிஎம் படம் வெற்றியைக் கொடுக்குமா என்பதைப் பார்க்கலாம்.
படத்தின் கதை:
ஹரிஸ் கல்யாண் – கௌதம்
நதியா – லீலா (ஹரிஸ் தாயார்)
இவானா – மீரா
மீரா திருமணம் செய்து கொள்வதில் உற்சாகமாக இருக்கிறார். ஆனால் தனது வருங்கால மாமியாருடன் வீட்டைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி அவர் கவலைப்படுகிறார். மறுபுறம், கணவனை இழந்து தவிக்கும் தாயை தனியாக விட கௌதம் விரும்பவில்லை.
மீராவின் கவலையைப் போக்கவும், தங்கள் உறவை வலுப்படுத்தவும், இவர்கள் மூவரும் கர்நாடகா மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்கின்றனர். இந்த ட்ரிப் அவர்களுக்குச் சாதகமாக இருந்ததா என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தின் முதல் பாதி வரை முகம் சுளிக்க வைக்கும் மொக்க வசனங்கள் நிறையா இருந்தது. 2-ம் பாதி அப்படியே உல்டா சம்பந்தமே இல்லாமல் காடு, கோவா, ஆசிரமம் என எங்கெங்கோ செல்கிறது கதை. காமெடி கலந்த கதையாக எல்ஜிஎம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்த்தால் டோட்டலா டாமேஜ் தான் படம். குறிப்பாக முகம் சுளிக்கவைக்கும் அளவிற்கு இருந்தது படத்தின் கிராபிக்ஸ்.
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி நியாபகம் வந்தது. ஜெயம் ரவிக்கும், நதியாவுக்கும் இருக்கும் உறவு இன்றும் அனைவரின் மனதில் நிற்கிறது. அதுபோல ரொம்ப நாள் கழிச்சு தாய் மகன் கான்செப்ட்டில் நதியா நடிக்கும் போது அந்த காம்போக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இந்த படத்தில் வந்த மம்மி செண்டிமெண்ட் காட்சிகளோ மிகவும் பழசாக இருந்தது ரசிகர்களுக்கு மற்றுமோர் ஏமாற்றம்.
தமிழ் சினிமாவிற்கு தயாரிப்பாளராக முதன்முறையாக தோனி அறிமுகம் ஆகும் படம் இது. அதனால் கொஞ்சம் இந்த கதைய நல்லா கேட்டுட்டு தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் ஓகே சொல்லிருந்திருக்கலாம்.







