முக்கியச் செய்திகள் குற்றம்

வாடகைக்கு இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர்!

சென்னையில் வாடகைக்கு இருந்த பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அவரது மனைவியுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் ஆட்டோ ஓட்டுவதற்காக வெளியே சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்கும் அவரது மனைவியிடம் வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் (வயது 50) அடிக்கடி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரும் ஜெயக்குமாரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி தனியாக இருப்பதை அறிந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் பயந்துபோன ஜெயக்குமார், அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து அவரது கணவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வந்த கணவர், கொடுங்கையூர் காவல்நிலையத்திற்கு சென்று வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் மீது புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: ராகுல் கண்டனம்

Gayathri Venkatesan

புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!

Halley karthi

வழிகாட்டி பலகை சர்ச்சை: பெரியார் பெயர் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டது!

Gayathri Venkatesan