மத்திய அரசின் 5 ஆண்டு திட்டங்களால் தான் மருத்துவமனைகள், சாலைகள் அமைக்கப்பட்டு நாடு மேம்படுகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பட்டு வருகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திருச்சி ஐஐஎம் வளாகத்தில் நடைபெற்ற…

மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பட்டு வருகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

திருச்சி ஐஐஎம் வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.ரன். ரவி, நலத்திட்டங்களுக்கு அரசு ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், 85 பைசா ஊழல் அதிகாரிகளுக்கு சென்றுவிடுகிறது என்றார்.

அதற்குத் தீர்வாகத்தான் டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளது என்றார். சிறந்த தலைவர்கள் மாற்றத்துக்காகக் காத்திருக்க மாட்டார்கள், மாற்றத்தை அவர்களே ஏற்படுத்துவார்கள் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் தான்
பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பட்டு வருகிறது. சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்.

இதற்கிடையே ஆளுநர் ஆன்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.