லண்டனில் ரத்தக் காயங்களுடன் சாலையில் ஓடிய குதிரைகளால் பரபரப்பு!

மத்திய லண்டனில் பரபரப்பான சாலை நடுவே கடிவாளம் பூட்டப்பட்ட இரண்டு குதிரைகள் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மத்திய லண்டனில் ஆல்ட்விச் பகுதியில்,  பரபரப்பான சாலை நடுவே ரத்த சொட்ட சொட்ட…

மத்திய லண்டனில் பரபரப்பான சாலை நடுவே கடிவாளம் பூட்டப்பட்ட இரண்டு குதிரைகள் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மத்திய லண்டனில் ஆல்ட்விச் பகுதியில்,  பரபரப்பான சாலை நடுவே ரத்த சொட்ட சொட்ட வெள்ளைக் குதிரை ஒன்றும்,  கறுப்பு குதிரை ஒன்றும் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.  இதனையடுத்து, “பல குதிரைகள் சாலையில் ஓடுவதாக நாங்கள் அறிந்துள்ளோம்.  அவற்றை பிடிக்க ராணுவ உதவியுடன் பணியாற்றி வருகின்றோம்” என லண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது.

https://twitter.com/BNONews/status/1783065231947653132

குதிரை காவலர் அணிவகுப்பின் பகல் நேர பயிற்சியின் போது,  குதிரைப்படையைச் சேர்ந்த 5 குதிரைகள் தப்பியதாக கூறப்படுகிறது.  அதில் தற்போது இரண்டு குதிரைகளை பிடித்துள்ளதாக லண்டன் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.  அந்த குதிரைகள் சாலையில் வேகமாக ஓடும் போது எதிரே வந்த வாகனங்களில் மோதியதால் குதிரைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.