உலகக் கோப்பை ஹாக்கி – ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் சுற்றில், ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெறுகிறது.…

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் சுற்றில், ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலத்தில் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இந்த தொடர் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்று நடைபெற்ற லீக் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டங்களில், ஆஸ்திரேலிய அணி 8-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸையும், இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் வேல்சையும் வீழ்த்தியது.

ரூர்கேலா மைதானத்தில் இன்று நடைபெற்ற கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்திய அணியின் ரோகிதாஸ் அமித்தும், 26வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்து அசத்தினர். தொடர்ந்து கோல் அடிக்க போராடிய ஸ்பெயின் அணியின் முயற்சி தோல்வியில் முடிய, இறுதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.