டெல்லி சட்டப்பேரவையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரிட்டீஷ் கால சுரங்கம் விரைவில் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற இருக்கிறது.
டெல்லி சட்டப்பேரவையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதை அங்கிருந்து டெல்லி செங்கோட்டையை இணைக்கும் வரை செல்கிறது. பிரிட்டீஷ் காலத் தில் சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து வர இது பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
15 அடி நீளமும் 6 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட இந்த சுரங்கப் பாதையின் சுவர்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் கூறும்போது, 1993ஆம் ஆண்டு, நான் எம்.எல்.ஏ. ஆனதும் பலரும் இந்த சுரங்கப்பாதை குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அதன் வரலாற்றை கண்டுபிடிக்க முயற் சித்தோம். ஆனால், அதில் முடிவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
சுரங்கப்பாதையின் ஒரு முனையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்கு மேல் தோண்டவில்லை என்றும் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாதை அழிக்கப்பட்டு விட்டதாகவும் சொன்னார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1912ஆம் வருடம் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டதும் தற்போதுள்ள சட்டப்பேரவை வளாகமே, அப்போது மத்திய சட்டப்பேரவையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் அப்போது சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர, இந்தப் பாதை பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த வருட ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இதைப் புதுப்பித்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.