முக்கியச் செய்திகள் விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்; துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

பாராலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் 50மீட்டர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் மணிஷ் நர்வால் 218.2 புள்ளிகள் பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றார். இதே போல் மற்றொரு இந்திய வீரர், சிங்ராஜ் 216.7 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இதனால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

தங்கம் வென்ற மணிஷ் நர்வாலுக்கு 6 கோடி ரூபாயும், வெள்ளி வென்ற சிங்ராஜுக்கு 4 கோடியும் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. இருவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத், ஜப்பானைச் சேர்ந்த Fujihara-ஐ எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரமோத், 2க்கு பூஜ்யம் என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்கப் பதக்கம் உறுதியாகியுள்ளது.  இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா சோதனை செய்தால் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தம்பதி செய்த விபரீத செயல்!

Ezhilarasan

“ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன்”; முதலமைச்சர் உறுதி

Halley karthi

111 நாட்களுக்குப் பின்னர் 35,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Halley karthi