கடந்த 2 நூற்றாண்டுகளில் மூன்றாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னை 1,000 மில்லி மீட்டர் அளவிற்கு மழையை பெற்றுள்ளது. அடாத மழையில் விடாது சிக்கி தவிக்கும் சென்னை மாநகரம் இந்த ஆண்டு கடந்து வந்த பாதைகள் குறித்து விரிவாக விவரிக்கின்றது இந்த கட்டுரை.
2022 ஜனவரி காலண்டரை எப்போது பார்ப்போம். டிசம்பர் முடியும் வரை இந்த மழை தொடருமா? என்கிற வார்த்தைகளை முனுமுனுத்துக் கொண்டே பதட்டத்துடன் பயனிக்கிறார்கள் நம் சென்னை வாசிகள். வட கிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதலே இந்த ஆண்டு சென்னையை ஒரு கை பார்த்து கொண்டு தான் இருக்கிறது. சொல்ல போனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் நிறைந்து வெள்ளம் கலிங்குகளில் மட்டும் தத்தளிக்கவில்லை. அதனுடன் தலை நகர் மக்களின் உள்ளமும் சேர்ந்தே தத்தளிக்கிறது என்றால் அதில் மாற்று கருத்துகள் இல்லை.
சரி சென்னை மாநகரம் இந்த ஆண்டு கடந்து வந்த பெருமழை குறித்த விபரங்களை பார்க்கலாம்.
- 25ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது – பின்னர் படிப்படியாக வழுப்பெற்று 28ம் தேதி முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அப்போது சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகள் மிக பலத்த மழையை சந்தித்தது. ஏறத்தாழ இரண்டு நாட்களில் மட்டும் 40 செ.மீ மழையை சென்னை பெற்றது.
- அடுத்ததாக நவம்பர் 8ம் தேதி இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி சென்னையில் மீண்டும் கனமழையை கொடுத்தது. வழுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா அருகே கரையை கடந்ததால் திருப்பதி போன்ற பகுதிகள் மிக கடுமையான மழையை சந்தித்தது.
- மூன்றாவது முறையாக நவம்பர் 26 முதல் குமரிக்கடல் அருகே நிலை கொண்ட வழுவான காற்றழுத்தம் காரணமாக சென்னை மீண்டும் மிக பலத்த மழையை பெற்றது. தற்போது உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயல் சின்னமாக மாறி வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை நோக்கி நகர்வதால் சென்னை மற்றும் தமிழகத்திற்கு மழைக்கான சாத்திய கூறுகள் இல்லை என்பது சற்று நம்மை இளைப்பாற செய்கிறது.
கடந்த 200 ஆண்டுகளில் நவம்பர் மாதம் பெற்றுள்ள மழை நிலவரம்
1918 நவம்பர் – 1,088மி.மீ
2005 அக்டோபர் – 1,078மி.மீ
2015 நவம்பர் – 1,049 மி.மீ
2021 நவம்பர் – 1,003 மி.மீ அளவிற்கு மழை பதிவாகி உள்ளது.
வானிலை மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அதே நேரம் இந்த ஆண்டு நவம்பரில் இயல்பை விட மிக அதிக மழை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் நீண்ட கால முன் அறிவுப்பின் வாயிலாக முன் கூட்டியே எச்சரித்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நெப்போலியன், ராஜ லட்சுமி







