திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் திமுக 75ஆம் ஆண்டு பவள விழா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக நகர மன்ற சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட 2000 கட்சித் தொண்டர்களுக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது.
விழாவில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ. வேலு கலந்து கொண்டு
உரையாற்றினார். அப்பொழுது,
“ஹிந்தியை தாய் மொழியாக கொண்டு பல்வேறு மாநிலங்களில்
படித்தவர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இருமொழி படித்தவர்கள் பல்வேறு நாடுகளில் மருத்துவர்களாக, பட்டப்படிப்பு முடித்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். 4000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழியை பாரத அமைச்சர்கள் பேசுவது பெருமையாக உள்ளது.
ஆனால் இந்தியை திணிப்பது வேதனையாக உள்ளது. நாலாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழை காத்து வரும் இரும்பு மனிதர் முக.ஸ்டாலின்” என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் நகர செயலாளர் சாரதிகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.







