மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை டிச. 7ஆம் தேதி வரை ரத்து!

மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவையில் கடந்த ஒரு சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வந்தது.…

மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவையில் கடந்த ஒரு சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வந்தது. அப்பருவ மழை காரணமாக சில நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் மழை குறைந்த பின் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இக்கனமழையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை மீண்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் கட்டணங்களையும் திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.