முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஹிஜாப் விவகாரம்:மாணவர்கள் பன்முகத்தன்மையை எப்படி கற்றுக் கொள்வார்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி?

மாணவர்கள் பன்முகத்தன்மைக்கு எவ்வாறு தயாராவார்கள் என்று ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதன்ஷு துலியா கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிவது குறித்து சர்ச்சை தொடங்கியது. பின்னர் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு, கல்வி நிறுவனங்கள் தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி  தீர்ப்பு வழங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கர்நாடகாவில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  மனுதாரர்கள் தரப்பில்,  “பெரும்பாலான மாணவர்கள் ஹிஜாப் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் “அத்தியாவசியமான மத நடைமுறை அல்ல” என்று தீர்ப்பு  வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் எதிர்த்தனர்.

இந்த வழக்கில் கர்நாடக மாநிலம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.எம். நட்ராஜ் மற்றும் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத்கி ஆகியோர் வாதிட்டனர். அப்போது  “வகுப்பறைகளில் ஒரே மாதிரியான ஆடைக் கட்டுப்பாடு மாணவர்களிடையே சமத்துவத்தை உறுதி செய்கிறது. குழந்தைகள், வகுப்பறைகளுக்கு வெளியே ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படவில்லை. மாநில அரசின் மதம் சார்ந்த இந்த நடவடிக்கை நடுநிலையானது. அதோடு மாணவர்களை மதம் அல்லது நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், ஒன்றாகவே வகைப்படுத்தப்பட்டனர். மாணவர்களில் ஒரு பிரிவினர் ஹிஜாப் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினால், மற்றொரு பிரிவினர் காவி சால்வை அணிய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்” என்று வாதங்களை எடுத்து வைத்தனர்.  இதனையடுத்து, உடுப்பியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியர், மதத்தால் உருவாக்கப்பட்ட சுவர்கள் மற்றும் பிரிவினைகளிலிருந்து பள்ளிகள் விடுபட வேண்டும் என்று வாதிட்டார்.

‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை’ : கர்நாடக உயர்நீதிமன்றம்

 

அப்போது நீதிபதி துலியா, ஹிஜாப் பிரிவினைச் சுவரை உருவாக்கியது என்று அவர் கூறுகிறாரா என்று கேள்வியெழுப்பினார். பின்னர் நீதிபதி துலியா, ”கலாச்சாரம், உடை, உணவு வகைகளில் நாட்டின் பன்முகத்தன்மைக்கு மாணவர்களை தயார்படுத்தி அவர்கள் அதனை சாளரமாக பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள் அறிவிப்பு

Halley Karthik

கந்தகாரில் ராக்கெட் தாக்குதல்: அனைத்து விமானங்களும் ரத்து

Gayathri Venkatesan

தஞ்சை மாணவி தொடர் ஓட்டத்தில் நோபல் உலக சாதனை!

Gayathri Venkatesan