பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதியும்  , பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜுலை 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சென்னை கிண்டியில்…

பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
வெளியிட்டார். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதியும்  , பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜுலை 28ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் உயர்கல்வித்துறை
அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டு அது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது  அமைச்சர்பொன்முடி பேசியதாவது:

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதி அன்று தொடங்கும். 22 – 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், அதன் பின்னர் மூன்று கட்டமாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. பொதுப்பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு 28ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9 ஆம் தேதி வரை நடைபெறும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 ஆம் தேதி
வரையிலும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கி
செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெறும்.

முதலில் நான்கு சுற்றாக கலந்தாய்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அகில
இந்திய தொழில்நுட்ப கவுன்சில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை
முடிக்க கூறியுள்ளதால் மூன்று சுற்றாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற 430 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 157378
இடங்கள் இருக்கின்றன. இது சென்ற ஆண்டை விட 3100 இடங்கள் கூடுதலாக உள்ளது
அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல்
கல்லூரிகளில் சேர 11804 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை
காட்டிலும் 236 இடங்கள் அதிகம் எனவும் தெரிவித்தார். தொழிற்கல்வி
பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடு இடங்கள் 3143 என்றும் இது சென்ற ஆண்டை விட 61
இடங்கள் கூடுதலாக உள்ளது.

இந்த ஆண்டு புதிதாக இரண்டு பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டிருக்கிறது அவை (
ECE ADVANCED COMMUNICATION TECHNOLOGY மற்றும் ECE DESIGN AND TECHNOLOGY )

மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள்
ஏற்படுமேயானால் குறிப்பிட்டுள்ள தேதிகளுக்கு பிறகும் ஒரு கட்ட கலந்தாய்வு
நடத்தப்பட்டு காலியிடங்கள் இல்லாத வகையில் அனைத்து இடங்களும் நிரப்பப்படும்
அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் வேறு கல்லூரிக்கு செல்ல விருப்பப்பட்டால்
அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே
அறிவுறுத்தி உள்ளோம்: அது இந்த ஆண்டும் பின்பற்றப்படும். பொது பாடத்திட்டத்தை புதிய கல்விக்கொள்கையோடு ஒப்பிடுவது தவறு. இருமொழிக் கொள்கையில் தெளிவாக இருக்கிறோம். மேலும், 21ஆம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு நடத்த வருகிறோம் அதில் பொது பாடத்திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.