டபுள் டக்கர் ரயிலில் புகை – பயணிகள் அதிர்ச்சி!

குடியாத்தம் அருகே சென்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் சக்கரத்தில் புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  சென்னை பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது…

குடியாத்தம் அருகே சென்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் சக்கரத்தில் புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
சென்னை பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது C 6 பெட்டியின் சக்கரம் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனைக்கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்-

இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் பழுது சரி செய்யப்பட்ட நிலையில் 15 நிமிடம் தாமதத்திற்கு பிறகு மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில்  ரயில் சக்கரத்தில் உள்ள பிரேக் பகுதியில் உராய்வு

ஏற்பட்டு புகை வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.