மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கு இதுவரை 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை இந்த திட்டத்தின் வழியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பலன்பெறத் தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை பயின்று அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதிக் கல்லூரிகள் / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
அண்மைச் செய்தி: ‘12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு’
தகுதியான மாணவியரின் பள்ளி TC, 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதுவரை 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.








