அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி, பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல் நிலைப் பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஜூலை 12, 13-ம் தேதிகளில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி
ஆணையர் அறிவித்திருந்தார். முதலில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திவிட்டு, அதன்பிறகு பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களான ஈரோட்டை சேர்ந்த ராஜவேலு, சேலத்தை சேர்ந்த அருள்முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், தலைமை ஆசிரியர்களாக மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்து
உள்ளதால், பணியிட மாறுதலுக்கு முழு தகுதி இருப்பதால், பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்துவதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த
வேண்டுமென வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், பணியிட மாறுதல் தொடர்பான சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டி உள்ளதால், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரை ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, ஜூலை 13-ம் தேதி நடக்க உள்ள பதவி
உயர்வுக்கான கலந்தாய்வை இரண்டு வாரங்கள் தள்ளிவைக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22-ம் தேதிக்குள் தள்ளிவைத்தனர்.
– இரா.நம்பிராஜன்