உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக…

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க மத்திய ரிசர்வ் படையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை நடைமுறைப்படுத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவது அவசியம் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.