இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி!

பல்லடத்தில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் தினமும் வாகன ஓட்டுகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும்…

பல்லடத்தில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் தினமும் வாகன ஓட்டுகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல்லடம் போக்குவரத்து காவல்துறை, மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தினர் இணைந்து நால் ரோட்டிலிருந்து செட்டிபாளையம் பிரிவு வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் துாரத்திற்கு இருசக்கர வாகனத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை பல்லடம் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அண்ணாதுரை கொடிசைத்து துவக்கி வைத்தார். மேலும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொது மக்களிடையே விளக்கி கூறினார்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.