குமாரபாளையம் அருகே விவசாய தோட்டத்தில் வளர்ந்த வந்த லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் புகுந்து பறவைகளை விழுங்கிய கட்டுவிரியன் பாம்பினை தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி விவசாயி. இவரது தோட்டத்தில் லவ் பேர்ட்ஸ் குருவிகளை வளர்த்து வருகிறார். இதனையடுத்து காலையில் குருவிகளுக்கு உணவு அளிக்க சென்றபோது கூண்டுக்குள் உள்ள நான்கு லவ் பேர்ட்ஸை பாம்பு ஒன்று விழுங்கி படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு 6 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பினை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். இதனையடுத்து பாம்பினை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் விட்டு சென்றனர்.
—அனகா காளமேகன்







