ஹெலிகாப்டர் விபத்து; ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு

குன்னுார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், முப்படைகளின் தலைமை…

குன்னுார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இவ்விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விசாரணை தொடங்கியுள்ளது. விபத்து நடந்த இடத்தை ட்ரோன் கேமிரா மூலம் படம்பிடித்து முதல்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். இதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

https://twitter.com/news7tamil/status/1468876505212080132

விபத்து குறித்து விசாரிப்பதற்காக அதிகாரியாக நியமிக்கப்பட்ட, ஏ.டி.எஸ்.பி முத்துமாணிக்கம், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதேபோல, ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு நியமித்த விசாரனை அதிகாரியான மன்வேந்தர் சிங் சம்பவ இடத்திற்கு வருகைதந்துள்ளார்.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீர்ர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

https://twitter.com/news7tamil/status/1468889159620186120

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.