முக்கியச் செய்திகள் இந்தியா

முடிவுக்கு வருகிறது வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வந்தனர். இதையடுத்து, அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும், குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்டவை தொடர்பாக, விவசாயிகளுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது.

இதையடுத்து, ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் மத்திய அரசு உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதைடுத்து டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை விவசாயிகள் அகற்றி வருவதுடன், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட ஆயத்தமாகி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

“இந்த சிரிப்பு எனக்கு முக்கியமானது” – புகைப்படத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா

Saravana Kumar

ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Vandhana