நெல்லையில் கொட்டித் தீர்க்கும் கனமழை – அவசர கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு…!

நெல்லையில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…

நெல்லையில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்..! – திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அவருடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.