சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை.. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்…

சென்னையில் இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் லேசானது முதல்…

சென்னையில் இரவு முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு கனமழை கொட்டி தீர்த்தது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.